ரயிலில் மும்பையிலிருந்து மங்களூருக்கு வித் அவுட்டில் பயணித்த இளைஞரிடம் இருந்து ரூ2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த மனோகர் சிங் என்பவரை கார்வார் அருகே ரயில்வே போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது இளைஞரின் பார்வையில் சந்தேகம் அடைந்த போலீசார், அங்கேயே நின்று விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதலளித்திருக்கிறார். அபராதம் கட்ட இளைஞர்தான் வைத்திருந்த பையில் கையை விட்டு தேடி கொண்டிருக்க, போலீசாரின் கவனம் அந்த பையின் மேல் விழுந்தது, அவ்வளவுதான்…
பையை பிரித்து பார்த்த ரயில்வே போலீசார் மிரண்டு போயிருக்கிறார்கள். பை முழுவதும் புதிய இரண்டாயிரம் பணக்கட்டுகள். தோராயமாக கோடிக்கு மேல் இருக்கும் என யூகித்த அதிகாரிகள் பணத்திற்காக அவனங்களை கேட்க பணக்கட்டுகளை தவிர அவரிடம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இளைஞரை கையோடு பிடித்து ரயிலில் இருந்து கீழிறக்கினார்கள். சிக்கிய பண பையை எடுத்து கொண்டு இளைஞரை ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதற்கிடையே, ரயில் நிலையத்தில் குவிந்த போலீசாரால் சக பயணிகள் அலறி போனார்கள்.
நூறு கட்டுகள் கொண்ட இரண்டு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. முதலாளியின் பையை மங்களூரில் ராஜு என்பவருக்கு கொடுக்க மும்பையில் இருந்து மங்களூருக்கு வந்ததாக பிடிபட்ட இளைஞர் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ரயில்வே போலீசார் குற்றவாளியை கார்வார் கிராம காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours