நயன்தாரா திருமணத்தில் சர்ச்சை.! விசாரணை நடத்த முடிவு..!!

Estimated read time 1 min read

நேற்று காலை நடிகை நயன்தாராவிற்கு, விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், அஜித், மணிரத்னம், சூர்யா, கார்த்தி ஜோதிகா என பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடித்த கையோடு இன்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமலை திருப்பதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காலையில் இருந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்பின், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த, தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதனால், நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறியுள்ளாராம். இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                                                           –R Mohan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours