மாற்றுதிறனாளிக்கு நேரில் உதவிய முதல்வர்! நெகிழ்ச்சியில் தொண்டர்கள்..!

Estimated read time 1 min read

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்புத்தூர் அடுத்து  காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடைபெற்ற அரசு விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 24.77 கோடி செலவில் முடிக்கப்பட்ட 44 திட்டப்பணிகளை திறந்து வைத்து 119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வின்போது மாற்றுதிறனாளி ஒருவருக்கு மேடையிலேயே இரண்டு செயற்கை கைகளை முதல்வரே மாட்டிவிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்பட்டோர் நலத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மற்றம் ஊரக உள்ளாட்சித்துறை முதன்மைச்செயலர் அமுதா உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

                                                                                                                         – Geetha Sathya Narayanan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours