சென்னை :
இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் இன்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களுக்கு திருமணத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த திருமணத்தில் 20 புரோகிதர்கள் கலந்து கொண்டனர். மிகவும் ஆனந்தமாக திருமணம் நடந்து முடிந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் இன்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் நடந்து முடிந்துள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது திருமணம் குறித்து வாய்திறந்தார் விக்னேஷ் சிவன்.
ட்ரெண்டான திருமணம்
ஆயினும் தேதி குறித்து எந்தவிதமான தகவலும் அவர் தெரிவிக்காத நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து அவர்களது திருமணம் குறித்து எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் ட்ரெண்டாகின. மேலும் இவர்களது திருமணம் திருப்பதில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மீடியா முன்பு தகவல்
ஆனால் இதை உறுதி செய்யாமல் மௌனமாக இருவரும் இருந்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு இருவரும் இணைந்து அழைப்பிதழ் வைத்ததை தொடர்ந்து இந்தத் தகவல் உறுதியானது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மீடியா முன்னிலையில் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார் விக்னேஷ் சிவன்.
ரெசார்ட்டில் திருமணம்
இதனிடையே இன்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரெசார்ட்டில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் பிரபல ஹீரோக்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, சரத்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல சரண்யா உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.
20 புரோகிதர்கள்
திருமணத்தில் மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. விஐபிக்கள் தவிர்த்து மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவில் கட்டுப்பாடு இருந்தது. இதனிடையே திருமணம் முடிந்து வெளியில் வந்த புரோகிதர் மீடியா முன்பு பேட்டி அளித்தார். இந்த திருமணத்தில் 20 புரொகிதர்கள் கலந்துக் கொண்டு ஆகம விதிப்படி திருமணத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.
பல கோயில்களின் புரோகிதர்கள்
மந்திரம் முழங்க திருமணம் சிறப்பாக ஆனந்தமாக நடைபெற்றதாக திருமணத்தில் பங்கேற்ற புரோகிதர் ஒருவர் குறிப்பிட்டார். திருத்தணி, கபாலீஸ்வரர், திருவண்ணாமலை, காளிகாம்பாள் உள்ளிட்ட கோயில்களின் புரோகிதர்கள் இந்த திருமணத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஷாருக்கான், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டதாகவும் கூறினார்.
சிறப்பான பொருத்தம்
எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். 8 மணிக்கு துவங்கி 10.30 மணிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் பொருத்தம் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்றும் கூறினார்.
உரிய மரியாதை
தங்களுக்கு உள்ளே செல்ல எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் தங்களுக்கு உரிய மரியாதையுடன் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். வேதபாராயணம், திருமுறை பாராயணத்துடன் திருமணம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-Deepa S
+ There are no comments
Add yours