Viagra Over Dose : மண வாழ்க்கையை பாதித்த வயாகரா; ஓவர் டோஸினால் வந்த வினை…!

Estimated read time 1 min read

உத்தரப்பிரதேசம்:

Viagra Over Dose: ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வயாகரா மாத்திரை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் மிகையில்லை. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த உத்டிர பிரதேச நபரின் வாழ்க்கை நிரூபித்துள்ளது.

ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வயாகரா மாத்திரை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் மிகையில்லை. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த உத்டிர பிரதேச நபரின் வாழ்க்கை நிரூபித்துள்ளது.

திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நபர் தனது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் தினமும் வயக்ராவை உட்கொள்ளத் தொடங்கினார். அவர் வயாகரா மாத்திரையை தேவைக்கும் மிக அதிகமாக உட்கொள்ளத் தொடங்கியதால், அவரது ஆண் உறுப்பில் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியதாயிற்று.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், ஒரு நபர் திருமணமான சில நாட்களுக்குப் பிறகு தனது நண்பர்களின் ஆலோசனையின் பேரில் தினமும் வயாக்ரா மாத்திரையை உட்கொள்ளத் தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியதாயிற்று. மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

பிரயாக்ராஜைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு, திருமணமான மூன்று மாதங்கள் ஆகிய நிலையில், அவரது நண்பர்கள் பாலியல் சக்தியை அதிகரிக்க வயாக்ராவை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல், தினமும் 25-30 மில்லி கிராம் வயாக்ராவை உட்கொள்ளத் தொடங்கினார். ஆனால் அதனால், எந்த வித பலனும் இல்லை என, நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தனது அளவை அதிகரித்தார். அந்த இளைஞன் 200 மி.கி வயாகரா சாப்பிட்டத் தொடங்கினார்.

அவரது இந்த வினோத நடவடிக்கையினால், கோபமடைந்த மணப்பெண் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். காரணம் அந்த நபரின் அந்தரங்க பகுதி தானாக துடிக்க ஆரம்பித்தது.   20 நாட்களாகியும் துடிப்பது நிற்கவேயில்லை. அந்த நபர் கடைசியில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். ஆபரேஷனுக்குப் பிறகு நிலைமை இயல்பாகி விட்டாலும், இப்போது இதன் பக்க விளைவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று கூறப்பட்டது. இதனால் மன அழுத்தம் மிகவும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது.

எனினும், பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவமனை மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள், ஆண்குறி செயற்கை அறுவை சிகிச்சை செய்து அவரது அனைத்து பிரச்சனைகளையும் நீக்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த இளைஞன் இப்போது தனது இயல்பான வாழ்க்கையை நடத்துவார் என்றும், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சிறுநீரகவியல் துறையின் தலைவர் டாக்டர் திலீப் சௌராசியா கூறினார்.

மருத்துவர்களிடன் கலந்தாலோசிக்காமல் வயாக்ரா சாப்பிடுவது பெரும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

                                                                                                                   – Vidya Gopalakrishnan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours