புதுச்சேரி:
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே ஓடினர். புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் விக்ரம் திரைப் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக ஓட தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours