சென்னை:
தன்னை போலீஸ் என பொய்யாக கூறி திருமணம் முடித்ததால் விரக்தியில் நிஜ போலீசில் கணவரை மனைவியே கணவரை போட்டு கொடுத்திருக்கிறார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் வசித்து வருபவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 26 வயதான நிவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் போலீஸ் என கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தினகரன் மீது நிவேதா பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தினகரனை பிடித்து விசாரித்தபோது போலீசாரே புருவம் உயர்த்தி போனார்கள்.
ஐயப்பன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று போலியாக அடையாள அட்டையை வைத்து கொண்டு கையில் சிக்கியவர்கள் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் போலீஸ் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரியவந்தது. அப்படி பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்டு கூட்டமாக வீட்டிற்கு வந்ததால் தினகரன் போலீஸ் இல்லை என தெரியவந்தது.
அதனால் அவரது மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இத்தனை நாட்கள் கணவர் ஒரு போலீஸ் என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்க்கு ஒரு நிமிடத்தில் அது வெறும் நாடகம் என தெரிந்தது. அதை ஏற்று கொள்ள முடியாததால் போலீசில் அவர் மீது புகாரளித்தார்.
இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் யார் யாரை ஏமாற்றினார் ? எங்கெல்லாம் பணம் வாங்கியிருக்கிறார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours