தன்னை தானே திருமணம் செய்வது இந்து மதத்திற்கு எதிரானது- பாஜக பிரமுகர் கண்டனம்..!

Estimated read time 0 min read

குஜராத்:

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து என்ற 24 வயது பெண் வரும் ஜூன் 11ம் தேதி தன்னை தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்து திருமண முறைபடி அவரது திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கஷமா பிந்து கூறுகையில் சுய அன்பின் வெளிப்பாடாகவே இதை கருத வேண்டும். திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால், மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

ஷாமா பிந்துவுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். தற்போது குஜராத் பாஜக நகரப் பிரிவின் துணைத் தலைவர் சுனிதா சுக்லா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுனிதா சுக்லா கூறுகையில் பிந்து மனநிலை சரியில்லாதவர். இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார். இந்து கலாசாரத்தில் ஒரு ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என கூறியுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours