குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், தான் இறக்கவில்லை என்றும், சமாதி நிலையில் இருப்பதாகவும், 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் தன்னால் உணவு சாப்பிட முடியவில்லை என்றும் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் நிலை. அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைத்துக்கொள்கிறது’ என்று கூறியுள்ளார்.
தனது வீடியோ பதிவுகளாலும் வித்தியாசமான அறிவுறைகள் மற்றும் அறிவிப்புகளாலும் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் நித்தியானந்தா தற்போதும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவர் சமாதி நிலையில் இருக்கிறாரா? கோமா நிலைக்கு சென்று விட்டாரா? இந்தியா திரும்புவாரா? இந்த பதிவுகள் அவருடையதுதானா? என பல கேள்விகள் பலரது மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
-Sripriya Sambathkumar
+ There are no comments
Add yours