சேலம்:
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அடுத்த முனியம்பட்டி பகுதியில் நிலத்தடி குழாய் உடைந்து மின்சாரம் கம்பியின் மேல் நேரடியாக வானத்தை நோக்கி பாய்ந்த தண்ணீர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “விடியக்காலை 4 மணி முதலே நீர் மெல்லமாக கசியத் தொடங்கியுள்ளது என்றும், நேரம் ஆக ஆக நீர் கசிந்து வரும் இரும்பு குழாயின் ஓட்டை இன்னும் விரிசல் பெரிதாகி உள்ளது.
இந்த நீர்க்கசிவு மெல்ல மெல்லமாக பெரிதாகி வேகத்துடன் வானத்தை நோக்கி பாய ஆரம்பித்தது, அவ்வழியாக செல்லும் மின்சார கம்பிகள் மீது அந்த நீர் பாய்ந்ததே கசப்பான நிகழ்வாகும். நீர்க்கசிவு பெரிதாகத் தொடங்கிய உடனே அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர், அவ்வழியாக செல்லும் மின்சார கம்பிகளில் செல்லும் மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளனர். அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகனஒட்டிகளும் தண்ணீரை கசிவை கண்டு கூடினர்.
இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
+ There are no comments
Add yours