அதிகரிக்கும் கள்ளநோட்டுகள்; RBI அதிர்ச்சித் தகவல்; கண்டுபிடிப்பது எப்படி..!!

Estimated read time 1 min read

தற்போது நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2020-2021 ஆம் ஆண்டில் 500 ரூபாய் போலி நோட்டுகள் 102% அதிகரித்துள்ளன. கள்ள நோட்டுக்களில், ரூ.2000 நோட்டுகள் 54 சதவிகிதம் மற்றும் ரூ.10  நோட்டுகள்  16.4% அதிகரித்துள்ளது. 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7% அதிகரித்துள்ளது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் பிறகு சந்தையில் இருந்து கள்ள நோட்டுகள் முற்றிலுமாக அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கள்ள நோட்டுக்களை சந்தையில் இருந்து நீக்கும் வகையில் 1000 மற்றும் 500 நோட்டுகளை செல்லாதது என அறிவித்தது. ஆனால்  500 மற்றும் 2000 ரூபாய்க்கான போலி நோட்டுகளையும் மோசடி நபர்கள் தயார் செய்தனர். இந்நிலையில், 500 மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை எப்படி கண்டறிவது என்பதைக்  காணலாம்.

கடந்த ஆண்டுகளைப் பற்றி குறிப்பிடுகையில், 2019-20 ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் போலி நோட்டுகள், 30,054  பிடிபட்டன. ஒப்பிடுகையில், 2020-21 ஆண்டில், 500 ரூபாய் போலி ரூபாய் நோட்டுகள் 31.3% அதிகரித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் தவிர, 2, 5, 10 மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும் சந்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.

போலி 500 நோட்டை எப்படி அடையாளம் காண்பது எப்படி

1. ரூபாய் நோட்டை ஒளியின் முன் காண்பித்தால், ரூபாய் மதிப்பு எண்ணின் ஸீ-த்ரூ ரெஜிஸ்டர் (ஒளி புகும் போது) தோன்றும் காட்சி தெரியும்.

2. ரூபாய் நோட்டை 45 டிகிரி கோணத்தில் கண் முன் தூக்கி பார்த்தால் இந்த இடத்தில் 500 என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

3. தேவநாகரியில் 500 எழுதப்பட்டிருக்கும்.

4. மகாத்மா காந்தியின் படம் நடுவில் வலதுபுறம் இருக்கு.

5.  India என்ற எழுதப்பட்டிருக்கும்.

6. ரூபாய் நோட்டை லேசாக வளைத்தால், பாதுகாப்பு நூலின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து இண்டிகோவாக மாறும்.

7. பழைய ரூபாய நோட்டை ஒப்பிடுகையில், கவர்னரின் கையெழுத்து, உத்தரவாத ஷரத்து, வாக்குறுதி ஷரத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் வலது பக்கமாக மாறியுள்ளது.

8. இங்கு மகாத்மா காந்தியின் படம் உள்ளது. மேலும்  எலக்ட்ரோடைப் வாட்டர்மார்கும் தெரியும்.

9. மேல் இடது பக்கம் மற்றும் கீழே உள்ள வலது பக்க எண்கள் இடமிருந்து வலமாக அளவில் பெரிதாக இருக்கும்.

10. இங்கு எழுதப்பட்ட 500 என்ற எண்ணின் நிறம் மாறுகிறது. அதன் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறும்.

11. வலது பக்கம் அசோக தூண் காணலாம்.

12. வலது பக்க வட்டப் பெட்டியில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்; வலது மற்றும் இடது பக்கத்தில் 5 பிளீட் கோடுகள் மற்றும் அசோக தூணின் சின்னம், மகாத்மா காந்தியின் படம் ரஃபிள் அச்சில் உள்ளது.

13. நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு எழுதப்பட்டிருக்கும்.

14. ஸ்வச் பாரத் லோகோ வாசகத்துடன் அச்சிடப்பட்டிருக்கும்.

15. மையத்தை பகுதியில், பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

16. இந்தியக் கொடியுடன் செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

17. தேவநாகரியில் 500 அச்சுகள் உள்ளன.

                                                                                                        – Vidya Gopalakrishnan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours