பள்ளி விடுமுறைக்கு சென்ற மாணவிக்கு வடமாநில வாலிபர்களால் நேர்ந்த கொடூரம்..!

Estimated read time 1 min read

பெரம்பலுார்:

பெரம்பலுார் அருகே,14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை காரணமாக, பெரம்பலுார் மாவட்டம், அருமடல் கிராமத்தில் வசிக்கும் அண்ணன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அண்ணனும், அண்ணியும் வேலைக்குச் சென்றதால், அவர்களது, 3 வயது குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார். அன்று மாலை வீட்டுக்குள் சென்ற, வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இரவு வீட்டுக்கு வந்த அண்ணனிடம் நடந்த சம்பவத்தை, சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அருகிலுள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ராம் (20), காமேதஸ்வர்சிங் (19), பெருநாகசியா (20) ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                                                                                                                 -Laxman

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours