தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழக அரசு கண்கானிக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ராமநாத புரம் மாவட்டம். ராமேஸ்வரம் , வடகாட்டை சேர்ந்த மீனவ பெண் கடல் பாசி சேகரிக்க சென்ற பெண்ணை வட மாநிலத்தை சேர்ந்த கயவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மிகவும் கொடூரமான முறையில் எரித்து படுகொலை செய்த வட மாநில கயவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ 25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
தமிழக முழுவதும் தனியார் நிறுவனங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகிறார்கள் . இதில் ஒரு சில நபர்கள் வழிப்பறி , பாலியல் பலாத்காரம் , கொலை , கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற குற்ற செயல்களில் ஈடு படுகின்றவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும் . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களுக்கு குறைவான சம்பளத்திற்கு பணி புரிய வட மாநிலங்களில் உள்ளவர்களை தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூலம் அழைத்து வருகிறார்கள் . மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிறுவனத்தின் பணி நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள் . என்று கண்கானிக்காமல் மேத்தன போக்கில் தனியார் நிறுவனங்கள் இருப்பதுனால் தான் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடை பெறுகின்றன என்பது குறிப்பிட தக்கது.
ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யவும் கண்கானிக்கவும் தகுந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours