பாம்பு என்றாலே பயம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான வகையான பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை, அதனால்தான் மக்கள் அவற்றைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் பாம்பு வீடியோ வெளியானால் அவை வைரலாகின்றன. இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்பு வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிலர் ஆற்றில் நீராட வந்ததை காண முடிகிறது. அதே சமயம், சிலர் வெளியில் அமர்ந்து கேமராவில் காட்சியை படம் பிடித்து வருகின்றனர். இதற்கிடையில் ஆற்றில் மிதக்கும் நீளமான பாம்பு ஒன்று நீந்திக் கொண்டிருந்தவர்களின் அருகில் வருகிறது. பார்த்ததும் வெளியில் அமர்ந்திருந்த ஒருவரை குறிவைத்து அவரை நோக்கி நகரத் தொடங்குகிறார். பாம்பு தன்னை நோக்கி வருவதைக் கண்டு மிகவும் பதற்றமடைந்த அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
View this post on Instagram
அந்த வீடியோவின் முடிவில், அந்த நபரின் பின்னால் பாம்பு தொடர்வதைக் காணலாம். அவர் எங்கு சென்றாலும் அந்த பாம்பு அவரைப் பின்தொடர்கிறது. பாம்பை பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர்.
இந்த வீடியோ வைல்டிஸ்டிக் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. அத்துடன் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது.
– Vijaya Lakshmi
+ There are no comments
Add yours