BJP Cadre Murdered: போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக நிர்வாகி கொடூர கொலை..! 4 பேரை சுத்துபோட்டு தூக்கிய போலீசார்..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (30). இவர், மத்திய சென்னை பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பாலசந்திரன் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்குச் சென்றார். அங்கு சிலருடன் பாலசந்திரன் பேசிக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்றார்.

 

அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலச்சந்தரை சுத்து போட்டு சரிமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் பீதியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலச்சந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரதீப், கலைவாணணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை வழக்கில், ரவுடி பிரதீப் மற்றும் அவரின் கூட்டாளிகளான சஞ்சய், கலை, ஜோதி ஆகியோரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பிறகு தான் கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும்.

                                                                                                                                         -vinoth kumar

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours