“கறந்த பாலை கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின்” – யார் சொன்னது..?

Estimated read time 1 min read

கிருஷ்ணகிரி:

ஆவின் நிறுவனத்திற்கென ஒரு அடையாளம், மரியாதை உள்ளதென பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம் நாசர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.பின்னர், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 76 குழுக்களுக்கு 61 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள மானியம் மற்றும் பயிற்சி தொகையும் வழங்கினார்.

மேலும் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் தீவன விதைகளையும், மின்னணு குடும்ப அட்டைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி ஜெயச்சந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் டி மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தரம் இருப்பதைப் போல, ஆவின் நிறுவனத்திற்கு என்று ஒரு மரியாதை உள்ளது. கறந்த பால் கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின் நிறுவனம், என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பால்வளத் துறையில் நடைபெற்றுள்ள ஏராளமான தவறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் நாசர், ஆவின் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பொது மேலாளர், வணிக மேலாளர் உட்பட பலர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முழுமையான ஆய்வுக்கு பின்னர் வரும் அறிக்கையின் பேரில் தவறு செய்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும், அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

-Gowtham Natarajan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours