இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சமேளனம் இன்று (மே 25 ) அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளது.
சாதி அடிப்படையிலான மக்கள் தொகையிலான கணகெடுப்பின் கோரிக்கை மட்டும் இன்றி, இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் நடைபெறவுள்ளது. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம், பகுஜன் முக்தி கட்சி உள்ளிட்டோர் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பை மக்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும் என பகுஜன் முக்தி கட்சியின் செயல் தலைவர் டிபி சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோரிக்கைகள்-
தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும். தனியார் துறையில் SC/ST/OBC இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) செயல்படுத்தக் கூடாது.
+ There are no comments
Add yours