சென்னை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் அனேக இடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை ), நாளை யும் (புதன்கிழமை ) இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை , திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை , பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19, 20-ந்தேதிகளிலும் தமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெ ய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளை யும்)
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெ ப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும்,குறைந்தபட்ச வெ ப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இன்று முதல் 19-ந்தேதி வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா மற்றும் அதனையொட்டி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
19, 20-ந்தே திகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வே கத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours