புதுச்சேரி:
புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் கல்லூரி வாயில் முன்பு தாக்கிக்கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஒரு துறை சார்பில் பிரியாவிடை (Farewell) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மற்ற துறையைச் சேர்ந்த மாணவிகளும் வந்து கலந்து கொண்டதால் மாணவிகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
அப்போது எங்கள் துறை நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று கூறி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இவர்கள் கல்லூரிக்கு வெளியே சென்று கல்லூரி வாயில் முன்பு கீழே விழுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். அதை வீடியோ எடுத்து தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் தான் அடிக்கடி சண்டைபோட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு வெளியே வாயில் முன்பு சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போடும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours