சென்னை:
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் கர்நாடக மாநில கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். சிறுமியின் பெற்றோரும், சிறுமியும் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியுள்ளது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பயத்தில் துள்ளி எழுந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் டிக்கெட் பரிசோதகரிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளனர்.மேலும் இது குறித்து முதியவரிடமும் சிறுமியின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, ரயில் ஜோலார்ப்பேட்டை வந்தடைந்தவுடன் அங்கிருந்த ரயில்வே போலீஸாரிடம் முதியவர் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு வந்த ஜோலார்பேட்டை காவல்துறை அதிகாரிகள் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர், சென்னை வடபழனி பூக்கார தெருவில் வசித்து வந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் என்பது தெரியவந்தது.இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் போலீஸார் முதியவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
– Dayana Rosilin
+ There are no comments
Add yours