சென்னை:
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம். அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.இவருக்கு திருமணமாகிய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களாக மூதாட்டியை காணவில்லை என, அவரின் மருமகள் கணவன் சுரேஷின் அண்ணனிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர், நீலாங்கரை வீட்டிற்கு சென்று தனது தாய் குறித்து தம்பி சுரேஷிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தாய் செண்பகம் உயிரிழந்துவிட்டதாகவும், அவரை ட்ரமில் போட்டு சிமெண்ட் வைத்து மூடியதாகவும் சுரேஷ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூதாட்டியின் உடலை டிரமுடன் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-Dayana Rosilin
+ There are no comments
Add yours