விறகு வெட்டி பிழைப்பவரிடம் மிரட்டி பணத்தை பிடுங்கும் போலீஸ்! வைரலான வீடியோ..!

Estimated read time 1 min read

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளையடுக்கும் நபர்களிடமும், உரிமம் பெறாமல் முரம்பு மண் எடுக்கும் நபர்களிடமும், பட்டா நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டிச் செல்லும் விவசாயிகளிடமும் காவல் துறையினர் லஞ்சம் கேட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் சுரேஷ் என்பவர் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விவசாயிடம் பணம் கேட்டு அதிகாரமாய் லஞ்சம் வாங்கி பணத்தை பாக்கெட்டில் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார், குறிப்பாக லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மீது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறினார்.

மேலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பெற்ற பிள்ளைகள், மனைவி, பெற்றோர்களை விட்டுவிட்டு இரவு பகல் பாராமல் நேர்மையுடன் செயல்பட்டு வரும் காவலர்கள் மத்தியில் இது போல ஒரு சில காவலர்கள் அப்பாவி விவசாயிகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெறும் நிகழ்வால் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு அவப்பெயரே மிஞ்சுகிறது.

இந்நிலையில் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மீது எத்தகைய‌ நடவடிக்கை காவல் துறையினர் மேற்கொள்வார்கள் என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours