ஆந்திராவில் தொடர்ந்து நிகழும் ஆம்புலன்ஸ் அராஜகம்..! பைக்கில் எடுத்து செல்லப்பட்ட குழந்தையின் சடலம்..!

Estimated read time 0 min read

ஆந்திரா:

ஆந்திராவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் 2 வயது பெண் குழந்தையின் சடலம் பைக்கில் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த வாரம் ஆந்திராவில் ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த மகனின் உடலை தந்தை இருசக்கர வாகனத்தில் வைத்து 90 கி.மீ தூரம் கொண்டு சென்ற காட்சி காண்போரை கலங்க வைத்தது.

இந்நிலையில் ஆந்திர பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை கால் இடறி குழிக்குள் விழுந்துள்ளது.

விழுந்த போது அடிப்பட்டு மயக்கமடைந்த குழந்தையை சில மணி நேரத்திற்கு பிறகே பெற்றோர் கவனித்துள்ளனர். பின்னர் குழந்தையை குழியில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை இறந்து விட்டது என பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இதனால், மனமுடைந்த பெற்றோர் குழந்தையின் சடலத்தை திரும்ப பெற்றுக்கொண்டு இறுதி சடங்கிற்காக வீட்டிற்கு எடுத்துச்செல்ல முடிவு செய்தனர்.

குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகமோ ஆம்புலன்ஸை தர இயலாது.

உயிரிழந்தவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்த மருத்துவமனையின் நிர்வாக விதிமுறைகள் அனுமதிக்காது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் மறு வார்த்தை பேசாமல் குழந்தையின் உடலை பைக்கில் வைத்து அழைத்துச்சென்றுள்ளனர்.

புகாரோ, சண்டையோ எதுவும் இல்லாமல் அமைத்தியாக விலகிச்சென்றதாக தெரிகிறது. திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஷ்வர் ரெட்டி இச்சம்பவம் நிகழ்ந்ததென செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது ஆந்திர மக்களின் மன நிலையை காட்டுவதாகவும், ஆம்புலன்ஸ் பிரச்சனை அண்றாட வாழ்வில் சகஜமாக நடைப்பெறும் ஒன்று போல் ஏற்றுக்கொள்ளவும் மக்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் குறித்து இணையத்தில் பொது மக்கள், ஆந்திர அரசின் அலட்சியபோக்கினால் பிணங்களை இனி மக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலேயே எடுத்துச்செல்வதை விரைவில் வாடிக்கையாக்கிக்கொள்வர் என சாடி பேசி வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours