திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக கடந்த வருடம் மே 7ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
ஆட்சி அமைத்த ஒரு ஆண்டில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக ஆளுங்கட்சியான திமுகவும், திமுகவின் இந்த ஓராண்டு ஆட்சி இருண்ட காலம் என எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன.
அதுமட்டுமின்றி சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு, சென்னையில் நடந்த லாக் அப் டெத் என ஆளுங்கட்சி சிக்கல்களை சந்தித்துவந்தாலும், தங்களின் ஆட்சி மிகச்சிறப்பாக இருப்பதாக திமுகவினர் மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர்.
இந்நிலையில் இன்றுடன் திமுக ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு நிறைவடைவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.
+ There are no comments
Add yours