ஷவர்மா பிரியர்களே உஷார்..! அடுத்தடுத்து நடக்கும் பயங்கரம்- 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Estimated read time 1 min read

தஞ்சை:

ஷவர்மா சாப்பிட்ட கேரள மாநில மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவநந்தா உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அந்த உணவகத்தில் சாப்பிட்ட மேலும் சிலருக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் செயல்பட்ட அந்த ‘கூல்பார்’ சீல் வைத்தனர். இதனையடுத்து தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், மதுரையில் 52 ஷவர்மா கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 5 கடைகளில் கெட்டுப்போன 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் இயங்கி வந்த ஷவர்மா கடையில் கால்நடை கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதில் பிரவீன், பரமேஸ்வரன், மணிகண்டன் 3 பேருக்கு நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அந்த 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அந்த உணவு விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உணவு மாதிரிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது ஷவர்மா பிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours