முதலையின் டார்கெட்டில் மிஸ்ஸான மான் – வைரல் வீடியோ..!

Estimated read time 1 min read

கோடையில் வாடி வதங்கும் வன விலங்குகளுக்கு, வேட்டை தான் அன்றாட டாஸ்க். புல் திண்ணி விலங்குகளை மாமிச விலங்குகள் நாள்தோறும் வேட்டையாடிக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு கொடூரமாக இருந்தாலும், அதுதான் இயற்கை வகுத்துள்ள விதியாக இருக்கிறது. ஆனால், இவற்றில் இருந்து விதிவிலக்காக அங்கொன்று இங்கொன்றுமாய் சில அதிசயங்கள் நடக்கும். அந்த அதிசயங்கள் எல்லா நாட்களும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக, மானை வேட்டையாட வந்த சிறுத்தையிடம் இருந்து தாய் மான் தப்பிச் சென்றுவிடும்.

குட்டி மான் சிக்கிக் கொள்ளும். ஆனால், சிறுத்தை குட்டி மானை வேட்டையாடாமல் விட்டுவிடும். இந்த வீடியோ இணையத்தில் இன்றும் உள்ளது. காண்போரை இந்த வீடியோ கலங்க வைக்கும். இயற்கையின் விதிவிலக்கில் தென்பட்ட இந்தக் காட்சிபோல், சில விலங்குகள் வேட்டையில் இருந்து தப்பிக்கும் அதிசயமும் நடக்கும். அன்று வேட்டையாட வந்த விலங்குக்கு அதிர்ஷடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில், முதலையின் ஷார்ப் அட்டாக்கில் இருந்து மான் ஒன்று தப்பித்துள்ளது.

நிலத்தின் மேல் இருக்கும் சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் துரத்தியாவது வேட்டையாடும் என்றால், நீருக்குள் இருக்கும் முதலைகளின் வேட்டையை யாராலும் அறிந்து கொள்ளவே முடியாது. அது தண்ணீரில் இருக்கிறது என்பதை யூகிக்கக்கூட முடியாது. ஆனால், நொடிப் பொழுதில் வேட்டையை முடித்துவிடும். அந்தமாதிரி, மான் ஒன்று தண்ணீர் குடிக்க குட்டை ஒன்றின் அருகில் செல்கிறது. மெதுவாக தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, கணப்பொழுதில் நீருக்குள் இருந்து ராட்சத முதலை எழும்புகிறது. முதலையின் அட்டாக்கை யாருமே எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அந்த அட்டாக்கில் இருந்து மான் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில்  வைரலாகியுள்ளது. டிவிட்டரில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours