இந்தி வேணாம்..! ஆனா இந்தில படம் எடுத்து இந்தி ஹீரோயின நடிக்க வைப்பாங்க! பா.ரஞ்சித்தை சீண்டும் மோகன் ஜி…!!

Estimated read time 0 min read

சென்னை :

இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு இந்தி தெரியவே தெரியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய நிலையில், இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம் என இயக்குன மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், எனக்கு இந்தி தெரியவே தெரியாது இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ரஞ்சித் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” திரைத்துறை என்பது அதிக அளவில் வணிகரீதியாக இயங்குவதால் நிறைய பிரச்சனைகள் இருந்தது. என்றார்.

இந்தி திணிப்பு

மேலும், இந்தி மொழித் திணிப்பு என்பதை எந்த காலத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு இந்தி தெரியவே தெரியாது. ஆனால் ஆங்கிலம் தெரியும். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தி மற்ற மொழிகளில் என்னால் திரைப்படத்தை எடுக்க முடியும் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் இல்லை.

பா.ரஞ்சித் பேச்சு

ஒரு திரைப்படத்தை என்னால் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது இல்லை. எனக்கு திறமை இருக்கிறது எனது திறமை இந்தியை விட முக்கியத்துவம் பெற்றது இல்லை. தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடத்தை எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என ரஞ்சித் கூறினார்.

மோகன் ஜி

பா.ரஞ்சித்தின் கருத்தினை பலரும் வெகுவாக பாராட்டிய நிலையில், அவர் இந்தி படங்களை இயக்குவது ஏன்? இந்தி நடிகர்களை நடிக்க வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்தது. இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம் என இயக்குன மோகன் ஜி பதிலளித்துள்ளார். மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், தற்போது இயக்குனர் செல்வராகவனை வைத்து பாகாசுரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பா.ரஞ்சித் குறித்து விமர்சனம்

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, இந்தி ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஆனால் இந்தி நடிகர்கள், நடிகைகளை தமிழில் நடிக்க வைப்போம், இந்தி பேச புடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழி பெயர்த்து லாபம் அடைவோம்.. தமிழின் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.. இந்திக்கு எதிராக பேசும் எந்த சினிமா பிரபலமும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை… அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும்.. ஆதரவு தரலாம்..” என பதிவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours