சிதம்பரம்:
சிதம்பரம் அருகே திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பனிமலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தைல மரத்தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கடந்த 5 மாதங்களாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், செல்போன் சிக்னலின் மூலம் கொலையாளியை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கல்லூரி மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது . அதில், மாணவர் திருநங்கையிடம் அடிக்கடி பணம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளார். கொலை நடந்த தினத்தன்று அவரிடம் 100 ரூபாய் பணம் இருந்தது. ஆனால் திருநங்கை 200 ரூபாய் கேட்டுள்ளார்.
இதனால் திருநங்கைக்கும், புஷ்பராஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் திருநங்கை பனிமலரை அருகே கிடந்த சிமெண்ட் சிலாப்பால் தாக்கி கீழே தள்ளி கொலை செய்துவிட்டு அவரது செல்போனையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து போலீசார் கடந்த 5 மாதங்களாக விசாரணை நடத்தி செல்போன் சிக்னல்களை கொண்டு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+ There are no comments
Add yours