சென்னை:
நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 27-ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் 25-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை, பொதுத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours