சிவகங்கை:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனியார் டிவி நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சிவகங்கை காஞ்சிரங்கால் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 29) என்பவர் அனுமதி பெறாமல் தன செயலி மூலம் ஒளிபரப்பினாராம்.
இதுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனடிப்படையில் ஐதராபாத் சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், தலைமையில் போலீஸ்காரர்கள் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகியோர் இன்று சிவகங்கை வந்து ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகங்கை ஜே எம்1 கோர்ட்டில் ஆஜர் செய்தனர். பின்னர் ஹைதராபாத் அழைத்து சென்றனர்.
+ There are no comments
Add yours