Mask : மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. அதிரடி உத்தரவு..!

Estimated read time 1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 150-ஐ விட அதிகமாகும். வெகுநாட்களுக்கு பின் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இது நேற்றைய பாதிப்பை விட 90 சதவீதம் ஆகும்.

அதே நேரத்தில் நேற்று (ஏப்.,17) மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 இறந்திருக்கிறார்கள். இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. இது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா நான்காவது அலையின் ஆரம்பத்திற்கு அறிகுறியா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், இன்று உத்தரபிரதேசத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தில் மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours