சென்னை:
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 ந் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள தகவலில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ந் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் மார்ச் 14 ந் தேதி முதல் ஏப்ரல் 13.ந் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் ஏப்ரல் 18 முதல் 26ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours