இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து எடுக்க பட்ட பிஸ்ட் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
நடிகர் விஜய் நடித்த பிஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இத்திரைப்படத்தில் இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து இழிவு படுத்திய காட்சிகள் காட்ட பட்டன. நடிகர் விஜய் நடித்த கடந்த காலம் துப்பாக்கி படத்திலும் இது போன்ற காட்சிகளும் காட்ட பட்டன. தொடர்ந்து இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து நடித்து வரும் நடிகர் விஜயை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .
இந்துக்களும் – இஸ்லாமியர்களும் அண்னண் தம்பிகளாகவும் – மாமன் – மச்சானாகவும் எந்த வித வேற்றுமை இல்லாமல் ஓற்றுமையுடன் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழகத்தில் இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு உணர்வை உண்டாக்கி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பிஸ்ட் திரைப்படம் உள்ளது .
ரத்த தானம் , பேரிடர் காலத்திலும் , கொரோனா காலத்திலும், ஜாதி மதம் பேதம் பாராமல் அணைத்து சமூக மக்களுக்கும் தானாக முன் வந்து தேவையான அணைத்து உதவிகளும் செய்து வரும் இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து எடுக்க படும் திரை படங்களை பொது மக்கள் ஓரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதை திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் உணர வேண்டும்.
எனவே : இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து எடுக்க பட்ட பிஸ்ட் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தவறாக சித்தரித்து எடுக்க படும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மாண்பு மிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours