சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழச்சியில் அமைச்சர்கள், சென்னை மேயர், உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours