இரண்டு வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு..!

Estimated read time 0 min read

கோவை:

கோவை ஆனைகட்டி அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியில் சிக்கி 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து கேரள மாநிலம், மன்னார்காடு அருகேயுள்ள அட்டப்பாடி சரக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை முள்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுத்தையின் உடலை மீட்டுள்ள வனத்துறையினர், இன்று அதன் உடலை உடற்கூராய்வு செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours