அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்..பல்கலைக்கழகத்தில் பயங்கரம்!

Estimated read time 0 min read

டெல்லி:

டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பட்டமேற்படிப்பு படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதனால் ஒன்றிய அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்ததராக நியமித்துள்ளது. இதுபோதாது என்று பா.ஜ.க கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு இரவு நேரத்தில் விடுதிக்குள் நுழைத்த ஏ.பி.வி.பி அமைப்பனர் அங்கிருந்த மாணவர்களை கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைவைத்தது.

தற்போது மீண்டும் பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாணவர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours