திருப்பூர்:
திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் வாகனத்தில் தீடிரென புகை வருவதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு அந்த நபருக்கு தெரிவிக்க முயன்றனர். அதை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி சென்ற நபர் உடனடியாக சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார். பின்னர் அந்த பேட்டரி அதிக அளவிலான புகையை வெளியே விட்டபடி எரிய துவங்கியது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி பேட்டரியில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பெட்ரோலுக்கு மாற்றான பேட்டரி வாகனங்கள் பலர் வாங்க நினைத்து வரும் நிலையில் தொடர்ந்து பேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
+ There are no comments
Add yours