சேலம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச் சாராயம், உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபடுவதும், கஞ்சா விற்பனை செய்வதில் பலரும் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் தவறான வழிக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டது.
அதன் காரணமாக, சேலம் மாவட்டம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்தலில் ஈடுபடுபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஓமலூர் காவல்துறையினருக்கு காதுபட தகவல் வந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பவளத்தனூர் இலங்கை தமிழர் முகாமில் கஞ்சா பயன்பாடு அதிகமாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று குருக்குப்பட்டி பவளத்தானூர் காளியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை திருத்தும் விழிப்புணர்வு முகாம் குருக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் தாரமங்கலம் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓமலூர் டிஎஸ்பி அவர்கள் கலந்து கொண்டனர், கவுன்சிலர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கஞ்சா மற்றும் மாத்திரைகள் விற்பனைகள் தொடர்ந்தாள் நம் சமூகம் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பதை இயல்பான கருத்து.
+ There are no comments
Add yours