ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி என அமித்ஷா பேச்சு..!

Estimated read time 1 min read

டெல்லி :

டெல்லியில் நாடாளுமன்ற மொழி அலுவலக குழு கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். வெவ்வேறு மாநில மக்களும் பேசி கொள்ளும் மொழியாக இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது ஒன்றிய அமைச்சரவையில் 70% அலுவல்கள் இந்தியிலேயே நடைபெறுவதாக கூறியுள்ளார். அலுவல் மொழியிலேயே அரசை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருப்பது இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சு இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் #இந்திதெரியாதுபோடா, #NationalLanguage #Tamil உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours