சென்னை:
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்வுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவேண்டும். சிசிடிவி கேமரா செயல்படுவதுடன் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் 2 பூட்டுகள் கொண்டு பூட்டியிருக்க வேண்டும்.
பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்கக் கூடாது. பொதுத்தேர்வு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களையே தேர்வுபணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
+ There are no comments
Add yours