வேலுார்:
வேலுார் எம்பி கதிர் ஆனந்த் லோக்சபாவில் பேசு கையில், சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணை விலைகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் உள்நாட்டு சமையல் காஸ் விலை உயர்வை மத்திய அரசு முன்பு அறிவித்துள்ளதா? அப்படி என்றால் அதன் விவ ரம்?, விலை உயர்வை கட் டுக்குள் வைக்க நடவடிக்கை கள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 26.06.2010 மற்றும் 19.10.2014 முதல் சந்தையில் நிர்’ ணயம் செய்யப்பட் டது. அப்போதிலி ருந்து, பொதுத்துறை எண்ணை நிறுவனங் கள் பெட்ரோல், டீசல் தயாரிப்பு மற்றும் வரி அமைப்பு, உள்நாட்டு சரக்கு மற்றும் பிற செலவுக்கு ஏற்ப முடிவு எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் எல்பிஜி நுகர்வோருக்கான விலைகளை மத்திய அரசுதான் மாற்றிய மைக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய எரி சக்தி சந்தைகள் மற்றும் ஆற்றல் விநியோக இடை யூறுகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்ப டுத்தவும் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கச்சா எண்ணை வாங்க ஒரே நாட்டைச் சார்ந்து இருக்காமல் பல நாடுகளில் இருந்து வாங் கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி 2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி லிட்டருக்கு 5 முதல் 10 ரூபாய் குறைத் துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
+ There are no comments
Add yours