மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை; பகீர் வீடியோ..!

Estimated read time 0 min read

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஈஸ்வர் தாஸ் தமது மகளின் உடலை தோளில் சுமந்து 10 கி.மீ. தூரம் உள்ள கிராமத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பார்ப்போரை கண் கலங்க செய்யும் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. இதையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours