சென்னை:
மாணவர்களே உஷார்..! இனி படிக்கட்டில் பயணித்தால் எப்.ஐ.ஆர்……. தமிழகத்தில் சற்றுமுன் புதிய அதிரடி….!!!
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது.
பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கதை. அதை கேட்கும் நடத்துனர்கள் உடன் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவர். இதை தடுக்க படியில் பயணம் செய்து இரண்டாவது முறையாக மாணவர்கள் பிடிபட்டால் வழக்கு தொடர காவல்துறை முடிவு செய்துள்ளது..!
+ There are no comments
Add yours