பெங்களூரு:
பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்து இருந்த நித்தியானந்தா, பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமினில் வெளிவந்த அவர், தற்போது அடையாளம் தெரியாத, ‘கைலாசா’ என்ற, தானே பெயரிட்டுள்ள நாடு ஒன்றில் தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் உலா வருகிறார்.
இந்நிலையில் நித்யானந்தா மீது மீண்டும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சாரா லேண்டரி என்ற வெளிநாட்டு பெண், பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். அதில், ‘கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர்.
எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்’ என கூறி உள்ளார். அதை பார்த்த பிடதி போலீசார், ‘இது போன்ற, இ – மெயில் புகார்களை ஏற்க முடியாது. அதனால் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் இந்தியாவின் ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளியுங்கள்’ என பதில் அனுப்பி உள்ளனர்.
சாரா லேண்ட்ரி தனது ட்விட்டர் பக்கத்திலும் சுவாமி நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் கைலாசாவில் உள்ள தங்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நித்யானந்தாவின் கைலாசா ஆசிரமம் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
+ There are no comments
Add yours