ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது. இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours