Nayanthara : விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் ஆசை… சர்ப்ரைஸாக நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

Estimated read time 1 min read

Nayanthara : விரைவில் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

 

சிம்பு மூலம் அறிமுகம்

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் ஹிட்டானதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இது அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக மாறியது.

நயனுடன் காதல்

ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் காதல் தொடர்ந்து வருகிறது. இவர்களது காதல் சக்சஸ் ஆனது போல் இப்படமும் வெற்றிவாகை சூடியது. இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

 

விஜய் சேதுபதி உடன் கூட்டணி

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த விக்கி, அவரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் அவரின் காதலி நயன்தாராவும், நடிகை சமந்தாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாடலாசிரியராகவும் ஜொலிக்கும் விக்கி

இயக்குனராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் பட்டைய கிளப்பி வருகிறார் விக்னேஷ் சிவன். இவர் எழுதும் பாடல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திற்காக இவர் எழுதிய பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.

நயன் மூலம் கிடைத்த அஜித் பட வாய்ப்பு

அஜித்தின் ரசிகனான விக்னேஷ் சிவனுக்கு, அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசையை தனது காதலி நயன்தாராவிடம் பல முறை சொல்லி இருக்கிறாராம் விக்கி. இதையடுத்து அஜித்தை சஸ்பென்சாக தொடர்பு கொண்டு பேசி ஓகே பண்ணிய நயன், இதன்மூலம் தனது காதலனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். இதனால் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளாராம் விக்கி. விரைவில் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours