கரூர்:
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவராக ஏ. மாரியப்பனை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ் . ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி கரூர் மாவட்டம், கனபதி பாளையம் தெற்கு , தாந்தோனி மலையை சேர்ந்த ஏ. மாரியப்பன் கரூர் மாவட்ட தலைவராக இன்று 15-03-2022 முதல் நியமிக்கபட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள ஏ. மாரியப்பன் அவர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்மாறு கேட்டு கொள்கிறேன். மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours