“களவு போன 32 கிலோ வெள்ளி கொலுசு” மற்றும் “ரேசன் அரிசி கடத்தலில்” ஈடுபட்ட குற்றவாளிகளை நடவடிக்கைக்கு காவலர்களுக்கு சான்றிதழ் பாராட்டு..! – சேலம் மாநகர காவல் ஆணையாளர்

Estimated read time 1 min read

சேலம்:

 

  • இன்று 15.03.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலைய குற்றவழக்கில் எதிரியை கைது செய்யவும் களவு போன 32 கிலோ வெள்ளி கொலுசு மீட்கவும் பெரும்பங்கு வகித்த செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.அமர்தலிங்கம், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.செல்வராஜ், திரு. செல்லப்பன், திரு.சரவணன், முதல்நிலைக் காவலர்கள் திரு.பாலசுப்ரமணி, திரு.மகேந்திரபூபதி, ஆனந்தகுமார் ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்கள்.

 

——————————————————————————————————————————————————————————————————————————————————————

  • இன்று 15.03.2022-ந் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் சேலம் மாநகரில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவும், 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யவும் நான்கு சக்கர வாகனம் ஒன்று மற்றும் இரண்டு சக்கர வாகனம் இரண்டு ஆகியவற்றை கைப்பற்றவும் பெரும்பங்கு வகித்த சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.G.ராமகிருஷ்ணன், திரு.A.சிவஞானம், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.கிருஷ்ணன், திரு.ராஜ்குமார், திரு.சுப்பராயன் மற்றும் தலைமைக் காவலர் திரு.பாலாஜி ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்கள்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours