தெலுங்கானா:
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன, கட்சியினர் மற்றும் மாநில மக்கள் ஆகியோர் கவலைப்பட வேண்டாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் குணமடைந்து வீடு திரும்ப தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours