Punjab Election Results 2022 Live: பஞ்சாபில் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி..!

Estimated read time 2 min read

பஞ்சாப் தேர்தல் முடிவுகள் 2022 நேரடி அறிவிப்புகள்: பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸுக்கு, ஆம் ஆத்மி கட்சி இடையே முக்கியப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இவர்கள் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

பஞ்சாபின் அடுத்த முதலமைச்சராக யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபை இருக்கலாம் என முடிவுகள் வெளியானது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

12:45 PM
ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகள்: தேர்தல் முடிவுகள் குறித்து சித்துவின் முதல் ட்வீட்
பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், சிட்டிங் எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து, 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

12:30 PM
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் 2022 முடிவுகள் – பாட்டியாலாவில் கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி
ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோஹ்லி, பாட்டியாலா தொகுதியில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
12:30 PM
லூதியானாவில் ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களில் முன்னிலை:
லூதியானாவில் மொத்தமுள்ள 14 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு இடத்தில் SAD வேட்பாளர் மன்பிரீத் சிங் அயாலி முன்னிலை வகிக்கிறார்.

2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மன்பிரீத் சிங் அயாலி எஸ்ஏடி கட்சி சார்பில் டாக்கா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் 2017 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் எச்எஸ் பூல்காவிடம் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

12:00 PM
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி:

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரிய வெற்றியைப் பெறும் எனத் தெரிகிறது, காங்கிரஸ் தனது உட்கட்சி பூசலால் சுயமாக அழிந்துவிட்டதை ஒப்புக்கொள்வதற்கு பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

 

11:30 AM

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கட்சியினரிடம் உரையாற்றுகிறார்:
ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான், மதியம் 12 மணிக்கு சங்ரூரில் உள்ள அவரது வீட்டில் ஆம் ஆத்மி கட்சியினரை சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தற்போது துரி தொகுதியில் காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை விட 29,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

 

11:30 AM

“கெஜ்ரிவால் மாடல் ஆட்சிக்கு” பஞ்சாப் மக்கள் வாய்ப்பு
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா கூறுகையில், தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது “கெஜ்ரிவால் மாடல் ஆட்சிக்கு” பஞ்சாப் மாநில மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர் என்பதற்கு தெளிவான அறிகுறியாகும் என்றார்.

இது “ஆம் ஆத்மி கட்சியின் யின் வெற்றி என்று சாமானியர்களின் வெற்றி என்று செய்தி நிறுவனமான ANI இடம் அவர் கூறினார்.

 

11:15 AM

ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை:
பஞ்சாப் சட்டசபையில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது என காலை 11.10 மணி நிலவரப்படி இசிஐ (ECI) இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் இதுவரை 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸின் 23.1% மற்றும் எஸ்ஏடி (SAD) 17.7% உடன் ஒப்பிடும்போது ஆம் ஆத்மி (AAP) இன் வாக்குப்பங்கு 42.14% ஆகும்.

 

11:15 AM

பஞ்சாபில் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி கட்சியினர்:
2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தெளிவான முன்னிலை பெற்றுள்ளதால், பஞ்சாபில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

 

11:15 AM

காங்கிரஸின் பிரதாப் சிங் பாஜ்வா பின்னடைவு:
ராஜ்யசபா எம்.பி., பிரதாப் சிங் பஜ்வா, முதல் முறையாக பின்தங்கியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது அங்கு அகாலி தளம் வேட்பாளர் குரிக்பால் சிங் மஹால் முன்னிலையில் உள்ளார்.

 

10:45 AM

இது பஞ்சாபின் வெற்றி என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் பல்ஜிந்தர் கவுர்:
தல்வாண்டி சபோவின் சிட்டிங் எம்எல்ஏவான ஆம் ஆத்மி கட்சியின் பல்ஜிந்தர் கவுர், எஸ்ஏடியின் ஜீத்மோஹிந்தர் சிங் சித்துவை விட முன்னணியில் உள்ளார். இது பஞ்சாபின் வெற்றி. பஞ்சாப் நீண்ட காலமாக ஒரு மாற்றத்தை தேடிக்கொண்டிருந்தது. இந்த மாற்றம் இப்போது வந்துவிட்டது என்று பல்ஜிந்தர் கூறினார்.

10:30 AM

பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை: 
காலை 10.10 மணி நிலவரப்படி பஞ்சாப் சட்டசபையில் உள்ள 115 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 86 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் இணையதளம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் துரி தொகுதியில் காங்கிரஸின் தல்வீர் சிங் கோல்டியை விட 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

 

10:00 AM

காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி உருவாகும்: ராகவ் சதா
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் இணைப் பொறுப்பாளர் ராகவ் சதா, சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிப்பதைக் குறித்த செய்திகளுக்கு பதிலளித்த அவர், “ஆம் ஆத்மி காங்கிரசுக்கு மாற்றாக மாறும் என்று கூறினார்.

10:00 AM

பிரகாஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங் பின்தங்கியுள்ளனர்:
லாம்பி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கியத் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் பின்தங்கியுள்ளார். அங்கு ஆம் ஆத்மி கட்சியின் குர்மீத் சிங் குதியான் முன்னிலை வகிக்கிறார்.

மற்றொரு மூத்த தலைவரான கேப்டன் அமரீந்தர் சிங் தனது கோட்டையான பாட்டியாலா நகரில் 5,864 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours